மீண்டும் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தார் அப்பாவு!!
By : King 24x7 Desk
Update: 2025-03-17 07:55 GMT

appavu
எதிர்க்கட்சி தலைவர் உட்பட தோழமை கட்சி தலைவர்கள் பேசிய அனைத்தையும் நான் கேட்டுக் கொண்டு தான் இருந்தேன். ஒருசில தவறுகள் நடந்திருந்தாலும் கூட என்னை நானே திருத்தி இருப்பேன் அல்லது முதல்வரால் திருத்தப்பட்டிருப்பேன் என சபாநாயகர் அப்பாவு கூறினார். அதிமுக ஆட்சியில் 30க்கும் மேற்பட்ட துறைகளின் மானிய கோரிக்கைகளை ஒரே நாளில் நடத்தியதை நினைவு கூறுகிறேன். இந்த அரசு ஒரே நாளில் 2, 3 மானிய கோரிக்கை நடத்துவதாக குற்றச்சாட்டுகள் வைத்தீர்கள் என நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தனை தொடர்ந்து மீண்டும் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்த பின் அப்பாவு கூறினார்.