எருமப்பட்டியில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி

Update: 2023-09-30 05:20 GMT

சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

எருமபட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் 110 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் சங்கீதா தலைமை வகித்தார். எருமப்பட்டி வட்டார மருத்துவர் லலிதா முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் இந்திய மருத்துவ சங்கத்தின் மகளிர் குழு தலைவர் மருத்துவர் மல்லிகா கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களின் உணவு முறைகள் குறித்து விளக்கம் அளித்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளையல் அணிவித்தார் மற்றும் எருமப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழரசி ஒன்றிய குழு துணை தலைவர் லோகநாதன்குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சங்கீதா வட்டார ஒருங்கிணைப்பாளர் பூபதி மற்றும் பேரூராட்சி கவுன்சிலர் விஜயா மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News