அடிப்படை வசதி கோரி எழுமலை கிராம மக்கள் நாத்து நடும் போராட்டம்
அடிப்படை வசதி கோரி கிராம மக்கள் நாத்து நடும் போராட்டம்
By : King 24X7 News (B)
Update: 2023-11-23 09:59 GMT
எழுமலை அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம் எழுமலை அருகே உத்தப்புரம் ஊராட்சியைச் சேர்ந்தது நல்லதாது நாயக்கன் பட்டி கிராமம்.இக்கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.இக்கிராமத்தில் அடிப்படை வசதிகளான சாலை வசதி குடிநீர் வசதி தெரு விளக்கு வசதி பேருந்து வசதி போன்றவை செய்து தரப்படவில்லை எனக் கூறப்படுகின்றது.இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகின்றது.இந்நிலையில் கடந்த பெய்த மழையில் தெருவிலுள்ள சாலை முழுவதும் சேறும் சகதியுமாக உள்ளதாகத் தெரிகிறது.இதனால் இக் கிராமமக்கள் பெண்கள் சிறுவர்கள் மிகுந்த சிரமப்பட்டு வந்துள்ளனர்.இதனால் சாலையை சீரமைக்கவும் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியும் இக்கிராம மக்கள் தெருச் சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டது.