ஏரி போக்கு கால்வாய் ஆக்கிரமிப்பால் குடியிருப்புகளை சூழும் உபரி நீர்

ஏரி போக்கு கால்வாய் ஆக்கிரமிப்பால் குடியிருப்புகளை உபரி நீர் சூழ்ந்து வருகிறது.

Update: 2023-11-30 16:38 GMT
ஏரி போக்கு கால்வாய் ஆக்கிரமிப்பால் குடியிருப்புகளை சூழும் உபரி நீர்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தாம்பரம் மாநகராட்சியின் ஜமீன் பல்லாவரத்தில்,மூவரசம்பட்டு ஏரி உள்ளது. பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி 2014ல் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டு, மழைநீர் சேமிக்கும் வகையில், 20 அடி ஆழத்திற்கு துார் வாரப்பட்டது. இந்நிலையில், ஏரியின் கலங்கல், போக்கு கால்வாய் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி இருப்பதால், தண்ணீர் செல்ல வழியின்றி குடியிருப்புகளை சூழ்கிறது.

பகுதிமக்கள் கூறியதாவது: மூவரசம்பட்டு ஏரி கலங்கல் பகுதி, போக்கு கால்வாய் ஆகியவை ஆக்கிரமிப்பாளர் பிடியில் சிக்கியுள்ளது. தொடர் மழை பெய்து, ஏரி நிரம்பி உள்ள நிலையில் உபரி நீர் செல்ல வழியின்றி, அன்பு நகர் உள்ளிட்ட குடியிருப்பு தெருக்களை சூழ்ந்து, பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஏரியின் கலங்கல், போக்கு கால்வாய் ஆக்கிரமிப்புக்களை அகற்றி, உபரி நீர் செல்ல, பொதுப்பணித் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மடிப்பாக்கம், புழுதிவாக்கம் ஏரிகளை போல மூவரசம்பட்டு ஏரியைச் சுற்றி நடைபாதை பூங்கா விளக்குகள் அமைக்க வேண்டும்.

Tags:    

Similar News