முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடக்க விழா மாநில வனத்துறை அமைச்சர் டாக்டர் மா. மதிவேந்தன், ஆட்சியர் பங்கேற்பு..

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடக்க விழா மாநில வனத்துறை அமைச்சர் டாக்டர் மா. மதிவேந்தன், ஆட்சியர் பங்கேற்பு..

Update: 2024-07-15 14:15 GMT
தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் நலனுக்காக முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்று நாமக்கல் மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடக்க விழாவில் கலந்துகொண்டு மாநில வனத்துறை அமைச்சர் டாக்டர் மா. மதிவேந்தன் பேச்சு.. நாமக்கல் மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. ராசிபுரம் அருகே உள்ள தேக்கல் பாளையத்தில் உள்ள காந்தி கல்வி நிலையம் நிதி உதவி பெறும் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாநில வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா. மதிவேந்தன், காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவ மாணவிகளுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டார். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் திருமதி சாவுமா தலைமை வகித்தார். அரசு உதவி பெறும் 42 பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டதன் மூலம் 1,889 மாணவ மாணவிகள் பயன் பெறுகின்றனர். இந்த நிகழ்ச்சியில், மாணவ மாணவிகளுக்கு பள்ளி உபகரண உபகரணங்களை வழங்கி பேசிய மாநில வனத்துறை அமைச்சர் டாக்டர் மா மதிவேந்தன், தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டு, 1,545 பள்ளிகளைச் சேர்ந்த 1.15 இலட்சம் குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர். இதில் நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 843 அரசு பள்ளிகளை சேர்ந்த 40,201 மாணவ மாணவிகள் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மூலம் பயனடைந்து வருகின்றனர். இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் இத்தட்டம் விரிவுபடுத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதன்படி, ஊரகப் பகுதியில் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் இத்திட்டம் தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சரால் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. அந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் செயல்படும் அரசு உதவி பெறும் 42 தொடக்கப் பள்ளிகளில் இத்திட்டம் இன்று தொடங்கப்பட்டது. இதன்மூலம் இந்தப் பள்ளிகளில் படிக்கும் 1,889 மாணவ மாணவிகள் காலை உணவு பெறுவார்கள். இத்திட்டத்திற்கான சமையலறை, பாத்திரங்கள், கேஸ் அடுப்பு, குடிநீர், மின்சார இணைப்பு ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இது போன்ற காலை உணவு திட்டம் உலக அளவில் முதன்மை பெற்ற திட்டமாக தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் மாணவர்கள் எவ்வித தடங்களும் இன்றி பள்ளிக்கு வந்து சென்று பாடங்களை கற்றுக்கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல் பெற்றோர்கள் காலை நேரத்தில் தங்கள் பணிகளுக்கு எவ்வித சிரமமின்றி பணிக்கு செல்ல முடியும். இதுபோன்று பள்ளிக்கல்வி துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் திட்டங்களால் முதன்மை பெற்று வருகிறது என்றும் அமைச்சர் மதிவேந்தன் விழாவில் பேசினார். இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ச. உமா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ப. மகேஸ்வரி, மாவட்ட சமூக நல அலுவலர் தி. காயத்ரி, வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் ஆர். எம். துரைசாமி மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஏ ஆர் துரைசாமி, தேங்கல்பாளையம் காந்தி கல்வி நிலைய உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் இரா. சுப்பிரமணியம், பள்ளி செயலாளர் வினோபாஜி, மாணவ மாணவிகள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

Similar News