சாரல் வந்தால் சகதி :மழை பெய்தால் குளம் தான் கரூர் சுரங்கப்பாதை

சாரல் வந்தால் சகதி :மழை பெய்தால் குளம் தான் கரூர் சுரங்கப்பாதை

Update: 2024-08-21 16:25 GMT
திண்டுக்கலில் கரூர் ரோடு சுரங்கப்பாதையில் தொடர்ந்து தண்ணீர் தேங்கி வருவதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். சாதாரண தூரலுக்கு சகதியாகவும், மழைக்கு குளமாகவும் எப்போதும் காட்சியளிக்கும் நிலை உள்ளது. திண்டுக்கல் _கரூர் ரோடு ரயில்வே சுரங்க பாலம் பெரிய சாபக்கேடாக உள்ளது.இந்த நிலையில் மழை பெய்தால் மட்டும் இல்லை. வெயில் காலத்திலும் கழிவு நீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சர்வீஸ்ரோடுகள் போட வில்லை, முகப்பு பாதை ரோடு வசதி இல்லை. திருச்சிரோடு பாலம் இணைக்கும் சாலை சமதளம் இல்லை. திறப்புவிழா நடத்திட தடையில்லா சான்று கொடுத்த அலுவலர் யார் என கேள்வி கேட்கின்றனர் .அவரை பாராட்ட வேண்டும்.நெடுஞ்சாலைத்துறை திட்டதுறை கட்டுபாட்டில் உள்ளது. மாநில நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்க வில்லை. இவர்களும் கண்டுகொள்வது இல்லை.மாநகராட்சி நிர்வாகம் மாநில நெடுஞ்சாலைத்துறை மற்றும் திட்டத்துறை கூட்ட முயற்சி ஆலோசனை செய்தால் மட்டுமே தீர்வு காண முடியும்.உயர் அலுவலர்கள் கார் ஒரே ஒருமுறை இவ்வழியாக சென்றால் பொதுமக்கள் படும் சிரமம் தெரியவரும்.மாவட்ட ஆட்சியர் அவர்கள் உதவிட வேண்டுமென திண்டுக்கல் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையம் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Similar News