அணியாபுரம் அரசு பள்ளியில் காமாராஜர் பிறந்தநாள் விழா!-நாமக்கல் எம்பி மாதேஸ்வரன் பங்கேற்பு.

அணியாபுரம் அரசு தொடக்கப்பள்ளியில் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன் எம்பி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காமராஜர் திருவுருவ புகைப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர்களை தூவி மரியாதை செலுத்தி தேசியக்கொடியை ஏற்றினார்.

Update: 2024-07-16 03:48 GMT
கல்வி வளர்ச்சி நாள் மற்றும் காமராஜர் பிறந்தநாள் விழா, நாமக்கல் - மோகனூர் சாலையில் உள்ள அணியாபுரம் அரசு தொடக்கப்பள்ளியில் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன் எம்பி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராஜர் திருவுருவ புகைப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர்களை தூவி மரியாதை செலுத்தி தேசியக்கொடியை ஏற்றினார். இந்நிகழ்வில் மோகனூர் அட்மா குழு தலைவர் நவலடி,பள்ளி தலைமை ஆசிரியர் தேவகி, ஆசிரியர் அகல்யா மற்றும் கொ.ம.தே.க விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட தலைவர் பழனிமலை, இணைசெயலாளர் ராஜசேகர், பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News