திராவிடர் கழகம் சார்பில் பொதுக்கூட்டம்

நீட் தேர்வை ஒழித்து கட்டுவோம் சேலத்தில் கி.வீரமணி பேச்சு

Update: 2024-07-16 04:05 GMT
திராவிடர் கழக இளைஞர் அணி, மாணவர் கழகம் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வல நிறைவு விழா பொதுக்கூட்டம் நேற்று சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்றது. இதற்கு திராவிடர் கழக சேலம் மாவட்ட தலைவர் இளவழகன் தலைமை தாங்கினார். ஆ.ராசா எம்.பி., ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ., சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேயர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- நீட் தேர்வு மாநில கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. நீட் தேர்வு அரசியல் சாசன சட்டத்திற்கு விரோதமானது. சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தில் இருந்து தான் நீட் தேர்வுக்கு கேள்வி என்றால், 12-ம் வகுப்பு படிக்கும் தமிழ் பிள்ளைகள் என்ன ஆவது. நீட் தேர்வுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்குகிறார்கள். நீட் தேர்வு என்பது சூழ்ச்சி, ஊழல் தான். தமிழ்நாட்டின் நலன் ஒவ்வொன்றுக்கும் 50 ஆண்டு காலம் போராட வேண்டி உள்ளது. தமிழ்நாட்டு பிள்ளைகளின் டாக்டர் கனவு நிறைவேறும் வரை போராடுவோம். நீட் தேர்வை எந்த ரூபத்திலும் ஒழித்து கட்டுவோம். மற்ற கூட்டணி பதவி கூட்டணி. இந்தியா கூட்டணி கொள்கை கூட்டணி. எனவே கொள்கை கூட்டணி தான் வெற்றி பெறும். நீட் தேர்வை ஒழித்து தலைமுறையை காப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

Similar News