தனியார் பிளாட் விவகாரம் முத்தரப்பு பேச்சு வார்த்தை
குமாரபாளையம் அருகே தனியார் பிளாட் விவகாரம் சம்பந்தமாக முத்தரப்பு பேச்சு வார்த்தை நடந்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி வீரப்பம்பாளையம் பகுதியில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் சார்பில் பிளட் வாங்கப்பட்டது. அதனை அரசு விதிமுறைப்படி ஊராட்சி நிர்வாகமும் அனுமதி கொடுத்தது. இதனை எதிர்த்து அப்பகுதியை சேர்ந்த சிலர், இங்கு வீடுகள் வந்தால், அதிலிருந்து வெளியேறும் கழிவுகளால் அருகில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என கோரிக்கையை முன் வைத்து, இந்த இடம் விற்பனை செய்ய கொடுத்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததுடன், இது குறித்து நீதிமன்றத்தில் வழக்குப்பதிவும் செய்துள்ளனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி கல்லங்காட்டுவலசு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தவிருப்பதாக எதிர்ப்பு தெரிவிக்கும் தரப்பினர் அறிவித்தனர். இது சம்பந்தமாக குமாரபாளையம் தாலுக்கா அலுவலகத்தில் தாசில்தார் சிவகுமார் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தபட்டது. இது குறித்து தட்டான்குட்டை ஊராட்சி தலைவி புஷ்பா கூறியதாவது: இந்த பிரச்சனை சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், விற்பனை செய்யப்பட்ட இடத்தில், பிளாட் வாங்கிய நபர்கள் வீடுகள் கட்டினால், யாரும் தடுக்க கூடாது. அவ்வாறு தடுத்தால், சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும், இந்த வழக்கு தீர்ப்பு வந்த பின், அதில் குறிப்பிட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும். யாரும், யாருக்கும் எவ்வித இடையூறும் செய்யக்கூடாது, என தாசில்தார் சிவகுமார் கூறினார். இவ்வாறு புஷ்பா கூறினார். இதில் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், வருவாய்த்துறையினர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.