விராலிமலை அருகே மண்டையூரில் பூர்ண புஷ்கலம்பிகா சமேத பெரிய அய்யனார் கோயில் ஆண்டு திருவிழா கடந்த 12ம் தேதி காப்பு கட்டுதலுடன் நடந்தது. தொடர்ந்து அதிகாலை சுவாமி புறப்பாடாகி மண்டையூர் தெருக்கூடம் சாவடிக்கு வந்து சேரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து தினந்தோறும் மண்டகப்படி தாரர்களின் ஆராதனை நிகழ்ச்சி, சுவாமி வீதியுலா ஆகியவை நடந்துவந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதை முன்னிட்டு நேற்று காலை 11 மணியளவில் அலங் கரிக்கப்பட்ட தேரில் பெரிய அய்யனார் உற்சவர் எழுந்தருள மாலை 3மணியளவில் மேளதாளம். அதிர்வெட்டுகள் முழங்க பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். முக்கிய வீதிகள் வழியாக வந்து மாலை தேர் நிலையை அடைந் தது. விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், திமுக வடக்கு மாவட்ட செயலர் செல்ல பாண்டியன், அறநிலையத்துறை உதவி ஆணையர் அனிதா மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இன்று மதியம் படுகளம், பாரிவேட்டை நிகழ்ச்சியும் பின்பு சாமிக்கு மஞ்சள் விளையாட்டு விழா நடக்கிறது. வரும் 26ம் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு சுவாமி சேமத்தில் வைக் கப்படும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறு கிறது. ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள், விழா கமிட்டியாளர்கள், கோயிநிர்வாகிகள், பொதுமக்கள் செய்திருந்தனர்.