புதுக்கோட்டை:புதுக்கோட்டை ராஜகோபாலபு ரத்தை சேர்ந்தவர் கணேசன். அரசு பஸ் டிரைவர். நேற்று முன்தினம் இரவு இவரது குடிசை வீடு தீப்பிடித்தது. தகவலறிந்ததும் புதுகை தீயணைப்பு நிலைய மீட்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதற்குள் வீட்டில் இருந்த பணம், நகை, பொருட் கள், உடைகள் எரிந்து சேதமடைந்தன. இதற்கிடையே எம்எல்ஏ முத்துராஜா, நகராட்சி தலைவர் திலகவதி தீ.விபத்து நடந்த வீட்டை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட கணேசனுக்கு ஆறுதல் கூறி நிவார ணம் வழங்கினர். தொழிலாளர் அணி தலைவர் பாலகிருஷ்ணன், வட்ட செயலாளர்கள் ஆனந்த், சரவணன், தொழிற்சங்க செயலாளர் வேலுச்சாமி ஆகியோர் உடனிருந்தனர். தீ விபத்து குறித்து திருக்கோகர்ணம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள் ளனர் .