எம்எல்ஏ நிதியிலிருந்து குடிநீர் தேக்க தொட்டி அமைக்க பூமி பூஜை

எம்எல்ஏ நிதியிலிருந்து குடிநீர் தேக்க தொட்டி அமைக்க பூமி பூஜை

Update: 2024-07-23 05:47 GMT
திருச்செங்கோடு ஒன்றியம், வட்டூர் ஊராட்சி, அப்பியாபட்டி குடித்தெரு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் 2023 - 24 ஆண்டிற்கான தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 30000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைப்பதற்கான பூமி பூஜை போடப்பட்டது.நிகழ்ச்சியில் கொமதேக பொதுச்செயலாளரும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ஆர்.ஈஸ்வரன் கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார். நாமக்கல் திமுக மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில், திமுக ஒன்றிய செயலாளர் வட்டூர் தங்கவேல்,கொமதேக நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் நதி ராஜவேல், மத்திய மண்டல இளைஞரணி செயலாளர் ராயல் செந்தில், நகர செயலாளர் சேன்யோ குமார், வடக்கு ஒன்றிய செயலாளர் சவின், கிழக்கு ஒன்றிய செயலாளர் கோபால் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள்,உள்ளிட்ட கழக பொறுப்பாளர்கள் இருந்தனர்.

Similar News