கதவை உடைத்து தவுடு மூட்டைகளை சாப்பிட்ட யானைகள்!
வனப்பகுதிக்கு யானைகளை விரட்டியடித்த வனத்துறையினர்.
கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி பகுதிகளில் யானை,காட்டெருமை,மான்,சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் உள்ளன.கடந்த சில தினங்களாக தொண்டாமுத்தூர், மருதமலை,தடாகம், நரசீபுரம் பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது.குடியிருப்பு மற்றும் விவசாய பகுதிகளுக்கு உணவு, தண்ணீரை தேடி வரும் யானைகள் வீடுகள், ரேஷன் கடைகள், உணவுப் பொருள்கள் இருக்கும் இடங்கள், விளை நிலங்களை சேதப்படுத்தி செல்கிறது. வனத்துறையினர் பல்வேறு குழுக்கள் அமைத்து வனவிலங்கு நடமாட்டத்தை கண்காணித்து உடனடியாக அவைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் பகுதியில் உள்ள விவசாயி கதிரவன் தோட்டத்திற்கு நள்ளிரவு வந்த இரண்டு காட்டுயானைகள் மாட்டுக்கொட்டகையில்மாடுகளுக்கு வைத்திருந்த தவுடு மூட்டையை சாப்பிட்டு சென்றுள்ளது.இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட அங்கு வந்த வனத்துறையினர் காட்டு யானைகளை இரவோடு இரவாக வனப்பகுதிக்குள் விரட்டியுள்ளனர்.இதனை விவசாயி கதிரவன் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவுவிட்டு உள்ளார்.தற்போது அக்காட்சிகள் வைரலாகி வருகிறது.