நுண்ணுயிர் பாசன திட்டத்தில் விவசாயிகளுக்கு மானியம். வேளாண் இணை இயக்குனர் தகவல்.
நுண்ணுயிர் பாசன திட்டத்தில் விவசாயிகளுக்கு மானியம். வேளாண் இணை இயக்குனர் தகவல்.
நுண்ணுயிர் பாசன திட்டத்தில் விவசாயிகளுக்கு மானியம். வேளாண் இணை இயக்குனர் தகவல். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சுற்றுவட்டார பகுதி பெரும்பாலும் நீர் ஆதாரம் குறைந்த பகுதியாக உள்ளது. இதற்காக வேளாண்மை துறை சார்பில் நுண்ணீர் பாசன திட்ட மூலம், விவசாயிகள் குறைந்த நீர் கொண்டு விவசாயப் பணிகளில் ஈடுபடும் வகையில் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஒரு ஏக்கர் பாசனத்திற்கு பயன்படுத்தும் தண்ணீரை மூன்று ஏக்கர் நிலத்திற்கு பயன்படுத்தலாம் எனவும், சொட்டு நீர் பாசன முறையை பயன்படுத்தும் போது தண்ணீர் பாய்ச்சுவதற்கான ஆட்கள் தேவை குறையும் எனவும், பயிரிடப்படும் பயிரின் வேரின் அருகில் மட்டும் நீர் பாய்ச்சுவதால் நீர் இல்லாத இடத்தில் கலை வளராது எனவும், இந்த திட்டத்தில் சிறு குரு விவசாயிகளுக்கு 100% மானியமும் பெரிய விவசாயிகளுக்கு 75% மானியமும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சொட்டுநீர் பாசனம் அமைக்க குறைந்தபட்சம் அரை ஏக்கர் நிலமும், தெளிப்பு நீர் பாசனம் அமைக்க ஒரு ஏக்கர் நிலமும் இருக்க வேண்டும். இதற்கு தேவையான நிலம் தொடர்பான ஆவணங்கள், சிட்டா, அடங்கல்,சிறு,குறு விவசாயி சான்று, குடும்ப அட்டை நகல், புகைப்படம் ஆகியவற்றை இணைத்து அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்கம் மையத்தை விவசாயிகள் அணுகலாம் என கரூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கலைச்செல்வி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.