பஸ் ஸ்டாண்ட் மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு!

பொது பிரச்சனைகள்

Update: 2024-08-04 06:04 GMT
புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்த போது பயணிகள் அலறி அடித்துக் கொண்டு ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திற்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் சென்று வருகிறது. இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் 50 கடைகளுக்கு மேல் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. கட்டடம் கட்டப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேலாகியுள்ளதால் கட்டடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை இழந்தன. இதை அடுத்து புதிய பேருந்து நிலையத்தை கட்டடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தும் பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை திடீரென பெய்த மழையில் பேருந்து நிலையத்தில் காரைக்குடி பேருந்து நிறுத்தம் பகுதியில் மேற்கூரை திடீரென்று இடிந்து விழுந்ததில் அந்த பகுதியில் இருந்து பயணிகள் மற்றும் வணிகர்கள் சுதாரித்துக் கொண்டு தலை தெரிக்க ஓடியதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை பேருந்து நிலைய கட்டடங்களை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News