மேற்குவங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சாரியார் மறைவிற்கு எலச்சிபாளையம் பேருந்து நிலையத்தில் இரங்கல் கூட்டம்
மேற்குவங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சாரியார் மறைவிற்கு எலச்சிபாளையம் பேருந்து நிலையத்தில் இரங்கல் கூட்டம்
திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையம் பேருந்து நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சாரியார் மறைவிற்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் மேற்கு வங்கத்தில் ஆட்சி செய்த போது கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை முதல்வராக செயலாற்றி மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினராகவும் பணியாற்றி வந்த பட்டாச்சாரியா வயது மூப்பின் காரணமாக உயிரிழந்து விட்டார். இந்நிலையில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்திற்கு கட்சியின் மேற்கு ஒன்றிய செயலாளர் கே.எஸ்.வெங்கடாசலம் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.சுரேஷ். திமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன்.திமுக இளைஞரணி நிர்வாகிகள் த.சத்யராஜ்.து.சதீஷ்குமார். மற்றும் சிஐடியு மோட்டார் சங்க நிர்வாகிகள் சக்திவேல். முனியப்பன் சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் பழனியம்மாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் மாரிமுத்து.ரமேஷ். பாலகிருஷ்ணன்.ஈஸ்வரன் மூத்த தோழர் பெரியசாமி உள்ளிட்டவர் கலந்து கொண்டு மலர் தூவி இரங்கல் கூட்டம் நடைபெற்றது.