வருவாய்துறை ஊழியர் அலட்சியம் கண்டித்து பொதுமக்கள் நுதான போராட்டம்

வருவாய்துறை ஊழியர் அலட்சியம் கண்டித்து பொதுமக்கள் நுதான போராட்டம்

Update: 2024-08-09 08:27 GMT
திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையம் ஒன்றியம் கிளாப்பாளையம் கிராமம் கருக்கூர் வசித்து வரும் சக்திவேல் (54) என்பவரது 12 சென்ட் நிலம் கணினி சிட்டாவில் குறைவாக வருவதை சரி செய்ய வேண்டி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது ஒரு வருடம் அலைக்கழிப்பு செய்து வருகின்றனர்.அதன் ஓராண்டு நிறைவு நாளான வெள்ளியன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நடை பயணம். கிளாப்பாளையம் கிராமம் கருக்கூர் சர்வே எண் 304/2D2D2 ல் 12 சென்ட் நிலம் உள்ளது. கிராம நிர்வாக அ பதிவேட்டில் அளவு சரியாக உள்ளது பட்டாவிலும் சரியாக உள்ளது கணினி சிட்டா எடுக்கும் பொழுது அதில் இரண்டு சென்ட் குறைவாக இருந்து வந்தன இதனை சரி செய்ய வேண்டி 9.8. 2023 அன்று திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியருக்கு மனு அளிக்கப்பட்டது அதனை தொடர்ந்து தற்போது வரை சரி செய்யாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதுவரை 98 நாட்கள் ஒரு வருடத்தில் அலுவலகம் சென்று எவ்வித முன்னேற்றம் இல்லாத நிலையில் கணினி மூலம் சரி செய்ய வேண்டும் என பதாகைகளுடன் கிளாப்பளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் இருந்து உஞ்சனை வழியாக திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று ஓராண்டு சென்று விட்டது என ஞாபகப்படுத்தும் போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடைபயணமாக சென்று கொண்டுள்ளனர். சிபிஎம் எலச்சிபாளையம் ஒன்றிய கவுன்சிலர் சு.சுரேஷ். மேற்கு ஒன்றிய செயலாளர் கே.எஸ்.வெங்கடாசலம்.மாவட்ட குழு உறுப்பினர் பழனியம்மாள்.ஒன்றிய குழு உறுப்பினர்கள் ரமேஷ். கிட்டுசாமி . ஈஸ்வரன். மோட்டர் சங்க மாவட்ட பொருளாளர் சக்திவேல்.உட்பட பலர் கலந்துகொண்டு நடை வேணுமாக சென்றனர் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Similar News