கரூரில், மாநில அளவிலான ஓயாமா கோப்பைக்கான கராத்தே போட்டி நடைபெற்றது.
கரூரில், மாநில அளவிலான ஓயாமா கோப்பைக்கான கராத்தே போட்டி நடைபெற்றது.
கரூரில், மாநில அளவிலான ஓயாமா கோப்பைக்கான கராத்தே போட்டி நடைபெற்றது. கரூர் கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சர்வதேச கராத்தே கூட்டமைப்பான கியோகுஷின் ரியூ சார்பில் மாநில அளவிலான ஓயாமா கோப்பை காண கராத்தே போட்டி நடைபெற்றது. இன்று நடைபெற்ற இந்த போட்டியில், ஈரோடு, திருப்பூர், சேலம், கோவை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 450-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி,கல்லூரி மாணவ- மாணவிகள் பங்கேற்றனர். போட்டியில் 20 கிலோ முதல் 60 கிலோ எடை உடைய மாணவ- மாணவிகளுக்கு தனி தனியாக பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. போட்டிகள் கட்டா, கிகான், குமித் என்ற மூன்று வகையான போட்டிகள் நடைபெற்றது. இந்த அமைப்பின் தமிழ்நாடு கிளைத் தலைவர் சென்சாய் தமிழ்ச்செல்வன் தலைமையில் போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளை கரூர் காவல்துறை கண்காணிப்பாளர் செல்வராஜ் துவக்கி வைத்தார், காவல் ஆய்வாளர் மணிவண்ணன், காவல் உதவி ஆய்வாளர் ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழ் வாரியர்ஸ் மார்ட்டியல் ஆர்ட்ஸ் அண்ட் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் தலைவர் சாமுவேல் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.