மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர்.!
மாவட்ட ஆட்சியர் ச.உமா, தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.;
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 660 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம்பொதுமக்கள் வழங்கினார்கள். மனுக்களைப் பெற்று கொண்ட மாவட்ட ஆட்சியர் மனுக்களை பரிசீலினை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், சேந்தமங்கலம் வட்டம், சிவநாயக்கன்பட்டி கிராமம், காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த பா.சரண்யா 27.3.2022 அன்று நீரில் மூழ்கி உயிரிழந்ததை அடுத்து, அவரது குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1.00 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.2.00 இலட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார்.தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைதளத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட 3 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.9,350/- வீதம் ரூ.28,050/- மதிப்பில் சிறப்பு சக்கர நாற்காலிகள், 1 மாற்றுத்திறனாளிக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.சுமன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் த.முத்துராமலிங்கம் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.