நாமக்கல் கமலாலய குளத்தில் படகு சவாரி துவக்கம்! -மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்பி தொடங்கி வைத்தார்.

படகுகளில் சவாரி கட்டணமாக மோட்டார் படகில் பெரியவர்களுக்கு ரூ.100 -ம் சிறியவர்களுக்கு ரூ.60-ம் வசூலிக்கப்படுகிறது,மிதி படகில் பயண கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ 60-ம், சிறியவர்களுக்கு ரூ.60-ம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த படகு சவாரி காலை 10 மணி முதல் மாலை 6.30 வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது

Update: 2024-08-21 16:15 GMT
நாமக்கல் நகரின் மைய பகுதியில் மலைக்கோட்டைக்கு தென்கிழக்கில் கமலாலய குளம் உள்ளது. இந்த கமலாலய குளத்தில் பொதுமக்களின் பொழுதுபோக்கு அம்சமாக படகு சவாரி கடந்த அதிமுக ஆட்சியில் இருந்து வந்தது. அதில் குழந்தைகள், தம்பதிகள் என பல்வேறு தரப்பினர் படகு சவாரி சென்று வந்தனர். 7 படகுகள் பொதுமக்கள் சவாரிக்காக இருந்து வந்தது கடந்த 2020-ம்‌ ஆண்டு தண்ணீர் குறைந்ததால் படகு சவாரி நிறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து கொரோனா பரவல் காரணமாக படகு சவாரி நிறுத்தம் தொடர்ந்தது‌. இந்நிலையில் கடந்த மாதம் பூங்காவை சீரமைக்கும் பணி நடைபெற்றது. மேலும் குளத்தில் படகு சவாரி செய்ய முன் ஏற்பாடுகளை செய்து வந்தனர். அதற்காக கேரளாவில் இருந்து 16 லட்சம் ரூபாய் மதிப்பில் தயாரிக்கப்பட்ட, 4 பெடல் படகுகள், ஒரு விசை படகு தயாரிக்கப்பட்டு, லாரிகள் மூலம் நாமக்கல்லுக்கு கொண்டு வரப்பட்டது.இதில் 4 மிதி படகுகளும், 8 பேர் அமர்ந்து செல்லும் வகையில் மோட்டார் படகு ஒன்றும் படகு சவாரி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உள்ளது. படகு சவாரி தொடக்க விழாவை மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். இராஜேஸ்குமார் எம்பி படகு சவாரியை தொடங்கி வைத்தார். மாநகராட்சி மேயர் து.கலாநிதி, துணை மேயர் செ.பூபதி, நாமக்கல் மாநகராட்சி ஆணையாளர் ஆர். மகேஸ்வரி, பொறியாளர் சண்முகம், ஒப்பந்ததாரர் வடிவேல்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனைத் தொடர்ந்து அனைவரும் குளத்தில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும்,பொழுதுபோக்கு பூங்காவில் குழந்தைகளுக்கான பேட்டரி வாகனங்களும் தொடங்கி வைக்கப்பட்டன. படகுகளில் சவாரி கட்டணமாக மோட்டார் படகில் பெரியவர்களுக்கு ரூ.100 -ம் சிறியவர்களுக்கு ரூ.60-ம் வசூலிக்கப்படுகிறது, மிதி படகில் பயண கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ 60-ம், சிறியவர்களுக்கு ரூ.60-ம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த படகு சவாரி காலை 10 மணி முதல் மாலை 6.30 வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. படகுகளில் செல்வோர் 'லைப் ஜாக்கெட்' எனப்படும் பாதுகாப்பு உடை அணிந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

Similar News