மனித உயிர்களை காவு வாங்கும் சாலை தடுப்பு

நெடுஞ்சாலைத்துறை அரசு அதிகாரிகள் அலட்சியம்: மனித உயிர்களை காவு வாங்கும் சாலை தடுப்பு

Update: 2024-08-21 16:22 GMT
அரசு அதிகாரிகளால் மனித உயிர்களை காவு வாங்கும் சாலை தடுப்புச்சுவர் உள்ளது. இதனால் தொடர்ந்து அந்த பகுதியில் விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. திண்டுக்கல் முதல் நத்தம் வழியாக கொட்டாம்பட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கோபால்பட்டி, எரமநாயக்கன்பட்டி, சேர்வீடு பிரிவு மற்றும் மெய்யம்பட்டி ஆகிய ஊர்களில் உள்ள சாலை தடுப்புச்சுவர்களில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு பல உயிர்கள் பலியாகியுள்ளன. பெரும்பாலான தடுப்பு சுவர்கள் சாலையின் வளைவுகளில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வரும் காலங்களில் விபத்தில்லாமல் மனித உயிர்களை காக்க சாலை தடுப்பு சுவர்களில் மிளிரும் வகையில் ஒளிரும் பட்டைகள் அமைக்க சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர் விபத்துகளை தடுக்க அறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டால் பொதுமக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை எனவும் தெரிவித்துள்ளனர். மனித உயிர்களைக் காக்க வேண்டிய அதிகாரிகளே மெத்தனமாக இருப்பதால் தொடர்ந்து விபத்துக்கள் நடப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Similar News