சரக்கு வாகனத்தை திருடிய நபர்களை துரத்திப் பிடித்த போலீசார்
திண்டுக்கல்லில் சரக்கு வாகனத்தை திருடிய நபர்களை முள்ளிப்பாடி அருகே துரத்திப் பிடித்த தாலுகா காவல்துறையினர்
திண்டுக்கல், பழைய கரூர்ரோடு பெஸ்கி கல்லூரி எதிர்ப்புறம் ராஜசேகர் என்பவருக்கு சொந்தமான TATA ACE சரக்கு வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த சரக்கு வாகனத்தை மர்ம நபர்கள் திருடி செல்வதாக திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலை அடுத்து தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன், சார்பு ஆய்வாளர் அருண்நாராயணன், சிறப்பு சார்பு ஆய்வாளர் சேகர் மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு திருடி சென்ற சரக்கு வாகனத்தை துரத்தி சென்று முள்ளிப்பாடி அருகே சுற்றி வளைத்து பிடித்து வாகனத்தில் இருந்தவர்களை விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் சரக்கு வாகனத்தை திருடி சென்றது திருச்சி ராம்ஜி நகர் பகுதியில் சேர்ந்த அப்துல்லா, உதயன் மற்றும் 16 வயது சிறுவன் என தெரிய வந்தது இதைத் தொடர்ந்து காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து சரக்கு வாகனத்தை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.