தேமுதிக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா

மறைந்த தேமுதிக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா திண்டுக்கல் பாரதிபுரத்தில் கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

Update: 2024-08-26 05:25 GMT
மறைந்த தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவரும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் விழா வருடம் தோறும் ஆகஸ்ட் 25ஆம் தேதி வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது இதை அடுத்து திண்டுக்கல் மாநகர தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பாக பாரதிபுரத்தில் முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது, திண்டுக்கல் மாவட்ட செயலாளர் மாதவன் தலைமையில் பாரதிபுரம் பகுதியில் கட்சியின் கொடி ஏற்றியும் முதியவர்களுக்கு வேஷ்டி சேலை வழங்கி அன்னதானம் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை தலைமை பொதுக்குழு உறுப்பினர் விஜய் முரளி செய்திருந்தார்.

Similar News