இராசிபுரத்தில் மாநில அளவிலான கால்பந்து போட்டி..

இராசிபுரத்தில் மாநில அளவிலான கால்பந்து போட்டி.

Update: 2024-08-26 13:58 GMT
ப்ரைம் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக மாநில அளவிலான கால்பந்து போட்டி ஞானோதயா சிபிஎஸ்இ பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. 10,12,14-வயது பிரிவுகள் கிழ் நடைபெற்றது. இதில் சேலம், நாமக்கல், ஈரோடு, தஞ்சாவூர் மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து 50 அணிகள் கலந்து கொண்டன. இதில் 14வயது மாணவிகள் பிரிவில் தஞ்சாவூர் LFC'A' அணி முதல் இடமும் LFCB' இரண்டாம் இடமும், ஞானோதயா CBSE மற்றும் செந்தில் பப்ளிக் சேலம் அணி மூன்றாம் இடமும் பெற்றனர். 10-வயது மாணவிகள் பிரிவில் சேலம் SECA அணி முதலிடமும், ஞானோதயா சிபிஎஸ்இ, பள்ளி இரண்டாம் இடமும், சேலம் செந்தில் பப்ளிக் மூன்றாம் இடமும் பெற்றனர். 14-வயது மாணவர்கள் பிரிவில் சேலம் செந்தில் பப்ளிக் அணி முதலிடமும், சேலம் EVPS அணி இரண்டாம் இடமும், நாமக்கல் கிக் ஸ்போர்ட்ஸ் மற்றும் MPM ஈரோடு அணிகள் மூன்றாம் இடமும் பெற்றனர். 12-வயது மாணவர்கள் பிரிவில் நாமக்கல் கிக் ஸ்போட்ஸ் அணி முதல் இடமும், தமிழன் ஸ்போர்ஸ் அணி. இரண்டாம் இடமும், ஞானோதயா மற்றும் சேலம் செந்தில் பப்ளிக் அணிகள் மூன்றாம் இடமும் பெற்றனர். 10-வது மாணவர்கள் பிரிவில் நாமக்கல் மெஜாப்டிக் அணி முதலிடமும், நாமக்கல் கிக் ஸ்போர்ட்ஸ் அணி இரண்டாம் இடமும், இராசிபுரம் பாவை சிபிஎஸ்இ பள்ளி, ஞானோதயா பப்ளிக் மூன்றாம் இடமும் பெற்றனர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் அனைவருக்கும் பரி பரிசளிப்பு விழாவில் இராசிபுரம் நகர மக்கள் நலக்குழு தலைவரும் முன்னாள் கவுன்சிலருமான வி.பாலு, மற்றும் Dr.J.சித்ரா துணைத் தலைவர் இந்தியன் மெடிக்கல் அசோசியேசன், இராசிபுரம், JCS எஸ்கேஎஸ், டையக்னாக்டிக் மற்றும் தர்மராஜ் துணைத் தலைவர், இராசிபுரம் மக்கள் நல குழு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்கள். இந்நிகழ்வில் ப்ரைம் ஸ்போட்ஸ் அகாடமி செயலாளர் S.தேவேந்திரன் வரவேற்புரையற்றினார், ப்ரைம் ஸ்போட்ஸ் அகாடமி தலைவர் N.மோகன்ராஜ் நன்றி கூறினார். ஞானோதயா பள்ளியின் முதல்வர் Dr. ரோஸ்லின் பதோ மற்றும் ரோட்டேரியன் .E.N. சுரேந்திரன் தலைவர் எலக்ட் 25-26 இராசிபுரம் ரோட்டரி கிளப் இருவரும் போட்டிகளை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்கள் இதில் பெற்றோர்கள், பயிற்சியாளர்கள், மற்றும் மாணவ, மாணவிகள், என பலர் கலந்து கொண்டனர்.

Similar News