விராலிமலை அருகே இளைஞர் கைது

குற்றச்செய்திகள்

Update: 2024-08-27 04:36 GMT
குளவாய்ப்பட்டியை சேர்ந்தவர் கணேசன். இவர் அதேபகுதியில் ஸ்டீல் வெல்டிங் கடை வைத்துள்ளார். இந்நிலையில், கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் விராலிமலை செல்வதற்காக இன்று அந்த வழியாக வரும்போது கடையின் உள்ளே ஆள் இருக்கும் சத்தம் கேட்டு சென்று பார்த்தபோது முத்துகிருஷ்ணாபட்டி சேர்ந்த சரவணன் வயது (31) என்பவர் கடைக்குள் அத்துமீறி நுழைந்ததாக தெரிய வந்தது. இதனையடுத்து விராலிமலை போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து அங்கு வந்த போலீசார் அந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News