தமிழ்நாட்டை திமுகவின் குடும்ப சொத்தாக மாற்றி உள்ளதாக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சு.

தமிழ்நாட்டை திமுகவின் குடும்ப சொத்தாக மாற்றி உள்ளதாக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சு.

Update: 2024-10-11 06:27 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பத்தூர் மாவட்டம் தமிழ்நாட்டை திமுகவின் குடும்ப சொத்தாக மாற்றி உள்ளதாக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சு. திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கு உட்பட்ட அதிமுக செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான ஆலோசனை கூட்டம் கந்திலி ஒன்றிய செயலாளர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி,கே.பி.அன்பழகன் மற்றும் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தமிழ்நாட்டை திமுகவின் குடும்ப சொத்தாக மாற்றி உள்ளனர். பணம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என திமுக நினைத்து மக்களை ஏமாற்ற நினைத்து கொண்டு இருக்கிறது. எனவே வருகிற 2026ஆம் தேர்தலில் மக்கள் திமுகவிற்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என தெரிவித்தார். அப்போது மாவட்ட துணை செயலாளர் ஏ.ஆர்.ராஜேந்திரன், மாவட்ட வழக்கறிஞர்கள் பிரிவு மாவட்ட செயலாளர் ர.ரமேஷ்,தகவல் தொழில்நுட்ப பிரிவு வேலூர் மண்டல தலைவர் டாக்டர்.நாகேந்திரன்,மாவட்ட இணைச்செயலாளர் டாக்டர்.லீலாசுப்பிரமணியம்,மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் டி.டி.சி.சங்கர்,கந்திலி கிழக்கு ஒன்றிய துணைச்செயலாளர் வி.டி.முருகன்,கந்திலி கிழக்கு ஒன்றிய மகளிரணி செயலாளர் ஆதிலட்சுமிமாறன், செவ்வாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மோகனா, கந்திலி ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் ஆறுமுகம், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் தம்பாகிருஷ்ணன் உள்ளிட்ட மாவட்ட,நகர,ஒன்றிய பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News