திம்பம் மலைப்பாதையில் நடமாடிய சிறுத்தை
திம்பம் மலைப்பாதையில் நடமாடிய சிறுத்தை
திம்பம் மலைப் பாதையில் நடமாடிய சிறுத்தை சத்தி புலிகள் காப்பகம் வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசிக்கின்றன. சத்தி - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோவிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. தமிழக - கர்நாடகா இடையே மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக திம்பம் மலைப்பகுதி உள்ளது. இந்த வழியாக தினசரி ஏராளமான பைக், கார், வேண், சரக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் நேற்று மாலை சிறுத்தை ஒன்று வனப்பகுதியில் இருந்து இரை தேடி வெளியே வந்தது. 18 வது கொண்டை ஊசி வளைவில் சாலையோர தடுப்பு அருகே நின்று கொண்டு இருந்தது. மேலும் அந்த சிறுத்தை வாகனங்கள் சென்றதை கவனித்து வந்தது. இதை அங்க நின்று இருந்த வாகனத்தில் இருந்த நபர் பார்த்து தனது மொபைலில் வீடியோ எடுத்தார். வாகனப் போக்குவரத்து இல்லாததை பார்த்த சிறுத்தை தடுப்பை தாண்டி ரோட்டை கடந்து சென்றது. திம்பம் மலைப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் அந்த பகுதியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும். வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை விட்டு கீழே இறங்க வேண்டாம் என வனத்துறை அதிகாரிகள் அறிவுத்தி வருகின்றனர். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.