நெல்லையில் தீபாவளி பண்டிகை நேற்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பட்டாசு வெடித்து தீபாவளியை வெகு சிறப்பாக கொண்டாடினர். அந்த வகையில் சீவலப்பேரியில் வேடிக்கப்பட்ட பட்டாசுகளின் குப்பைகள் இன்று காலை நிறைந்து பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றன.இதனை சீவலப்பேரி ஊராட்சி நிர்வாகம் அகற்றாமல் அப்படியே விடப்பட்டுள்ளதால் கிராமம் முழுவதும் குப்பையாக காட்சியளிக்கிறது.