திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி மெயின் ரோட்டில் கடந்த இரண்டு நாட்களாக குடிநீர் குழாய் பைப்பில் சேதமடைந்து வீணாக குடிநீர் செல்கின்றது. இவ்வாறு குடிநீர் செல்வதால் அப்பகுதியில் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே பைப்பினை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.