கரூர் மாநகராட்சிகளில் தேங்கிக் கிடக்கும் குப்பைகள் அகற்றும் பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்.

கரூர் மாநகராட்சிகளில் தேங்கிக் கிடக்கும் குப்பைகள் அகற்றும் பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்.

Update: 2024-11-01 08:54 GMT
கரூர் மாநகராட்சிகளில் தேங்கிக் கிடக்கும் குப்பைகள் அகற்றும் பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள். தீபாவளி பண்டிகை நேற்று முடிவடைந்த நிலையில் கரூர் மாநகராட்சி முழுவதும் டன் கணக்கான குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதனை அகற்றும் துணியில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஐந்து ரோடு, மேற்கு பிரதட்சணம் சாலை, அண்ணா வளைவு, பசுபதிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் பட்டாசு குப்பைகள் ஆங்காங்கே குவிந்து கிடக்கிறது. குறிப்பாக ஜவஹர் பஜார் அருகே உள்ள பசுபதீஸ்வரர் கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு திடீர் தரை கடைகள் அமைத்து வியாபாரம் செய்தனர். வியாபாரம் முடிந்த கையோடு தாங்கள் கொண்டு வந்த பிளாஸ்டிக் பைகளையும் ஆங்காங்கே குவித்து விட்டு சென்று விட்டனர். மேலும் பட்டாசுகள் வெடித்ததனால் பேப்பர் கழிவுகள் ஆங்காங்கே குவிந்து கிடக்கின்றது. இதனைக் கண்ட மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் இன்று காலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சேகரித்த குப்பைகளை அருகில் அரசு காலனி பகுதியில் உள்ள குப்பை கிடங்கிற்கு வண்டியில் அள்ளி சென்று வருகின்றனர்.

Similar News