புதுக்கோட்டை மாவட்டம் பெரம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் வீரமுத்து என்பவரின் மகன் பாக்கியராஜ் (29). இவருக்கும் இவரது தந்தைக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் இருந்த பாக்கியராஜ் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது சகோதரர் சிங்காரவேலு கொடுத்த புகாரின் பேரில் உடையாளிப்பட்டி காவல்நிலைய உதவி ஆய்வாளர் செல்வராசு விசாரணை நடத்தி வருகிறார்.