புதுகை காமராஜபுரம் 8ஆவது தெருவை சேர்ந்தவர் கார்த்திக். இவர் கடந்த மாதம் 29ஆம் தேதி இரவு 11 மணிக்கு குடிபோதையில் சாலையில் நடந்து கொண்டிருந்தார். அப்பொழுது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டது. புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்து விட்டார். சகோதரர் அளித்த புகாரின் பேரில் கணேஷ் நகர் காவல் துறையினர் விசாரணை செய்கின்றனர்.