ராஜபுரம் பிரிவு அருகே டூவீலர்கள் மோதல். ஒருவர் படுகாயம்.
ராஜபுரம் பிரிவு அருகே டூவீலர்கள் மோதல். ஒருவர் படுகாயம்.
ராஜபுரம் பிரிவு அருகே டூவீலர்கள் மோதல். ஒருவர் படுகாயம். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, எலவனூர், சின்னமேடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி வயது 64. இவர் நவம்பர் 7ஆம் தேதி மதியம் ஒரு மணி அளவில், சின்னதாராபுரத்தில் இருந்து கரூர் செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் ராஜபுரம் பிரிவு அருகே சென்றபோது, கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மக்கள் பாதை அருகே தெற்கு தெருவை சேர்ந்தவர் அலாவுதீன் வயது 44 என்பவர் வேகமாக ஓட்டி வந்த மற்றொரு டூவீலர் சுப்பிரமணிய ஓட்டிச் சென்ற டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வாகனத்துடன் கீழே விழுந்ததில் சுப்பிரமணிக்கு தலை, இடது தோள்பட்டை, முன்நெற்றி ஆகிய பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த சுப்பிரமணியின் மகன் பிரகாஷ் வயது 33 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் இது தொடர்பாக டூவீலரை வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய அலாவுதீன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் சின்னதாராபுரம் காவல் துறையினர்.