காவல் ஆய்வாளரை சந்தித்த விமன் இந்தியா மூவ்மெண்ட்

காவல் ஆய்வாளருடன் சந்திப்பு;

Update: 2024-12-01 08:02 GMT
நெல்லை மாநகர மாவட்டத்திற்கு உட்பட்ட மேலப்பாளையம் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் ஆய்வாளர் விஜியை விமன் இந்தியா மூவ்மெண்ட் நிர்வாகிகள் இன்று சந்தித்தனர். அப்பொழுது பெண்களின் பாதுகாப்பு மனித சமூகத்தின் பொறுப்பு என்ற தலைப்பில் நடைபெற்று வரும் பிரச்சாரத்தின் நோக்கத்தை எடுத்துரைத்து துண்டு பிரசுரம் வழங்கினர். இந்த நிகழ்வில் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஹசன் வகிதா, மாவட்ட செயலாளர் ராபியா, வழக்கறிஞர் ஜெசிமா ஆகியோர் உடன் இருந்தனர்.

Similar News