பாரதிதாசன் நகரில் தண்ணீர் குடிக்க கேட்பது போல் தங்க சங்கிலியை பறித்து சென்ற பெண் கைது.
பாரதிதாசன் நகரில் தண்ணீர் குடிக்க கேட்பது போல் தங்க சங்கிலியை பறித்து சென்ற பெண் கைது.
பாரதிதாசன் நகரில் தண்ணீர் குடிக்க கேட்பது போல் தங்க சங்கிலியை பறித்து சென்ற பெண் கைது. கரூர் மாவட்டம், தாந்தோணிமலை, பாரதிதாசன் நகர் அருகே உள்ள ஓம் சக்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கதிர்வேல் மனைவி அன்னக்கிளி வயது 65. இவர் டிசம்பர் 2-ம் தேதி மதியம் ஒரு மணி அளவில், அவரது வீட்டில் இருந்த போது, கரூர் மாவட்டம், வெள்ளியணை வடபாகம், தேவேந்திர நகரை சேர்ந்த தவசி மனைவி மாரியம்மாள் வயது 37 என்பவர் அன்னக்கிளி இடம் அன்பாக பேசுவது போல நடித்து, குடிக்க தண்ணீர் கேட்டு உள்ளார். வீட்டிற்குள் சென்று தண்ணீர் எடுத்து வந்த அன்னக்கிளி யின் கழுத்தில் இருந்த இரண்டு பவுன் தங்க செயினை கண்ணிமைக்கும் நேரத்தில் மாரியம்மாள் பறித்து கொண்டு தப்பி ஓடிச் சென்றார். இந்த சம்பவம் தொடர்பாக அன்னக்கிளி அளித்த புகாரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், தொடர்பாக நடத்திய விசாரணையில் மாரியம்மாள் இந்த தகாத செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனே மாரியம்மாளை கைது செய்து, பறித்துச் சென்ற இரண்டு பவுன் தங்க நகை பறிமுதல் செய்தனர். மேலும், அவர் மீது வழக்கு பதிவு செய்து, டிசம்பர் 14ஆம் தேதி வரை சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் தாந்தோணிமலை காவல்துறையினர்.