அமராவதி ஆற்றில் வெள்ளம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க ஆட்சியர் தங்கவேல் அறிவிப்பு.
அமராவதி ஆற்றில் வெள்ளம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க ஆட்சியர் தங்கவேல் அறிவிப்பு.
அமராவதி ஆற்றில் வெள்ளம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க ஆட்சியர் தங்கவேல் அறிவிப்பு. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில் அமைந்துள்ளது அமராவதி அணை. அமராவதி அணையின் முழு கொள்ளளவு திறன் 90 அடி ஆகும். தமிழகத்தில் தொடர்ந்து வரும் கனமழையால் அமராவதி அணையின் நீர்மட்டம் விறுவிறு என ஏறியது. இன்று காலை 7 மணி நிலவரப்படி அணை நீர்மட்டம் 87.54 அடியாக உயர்ந்தது. அணைக்கு நீர் வரத்து 27,983 கன அடியாக வந்து கொண்டு இருந்தது. இதனால் அணையில் இருந்து 26 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. மீண்டும் இன்று காலை 9 மணி அளவில் அணைக்கு நீர் வரத்து 30,294 கன அடியாக உயர்ந்ததால், அணையில் இருந்து 36 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் அமராவதி ஆற்றின் கடைமடை பகுதியாக உள்ள கரூர் மாவட்டத்தில் அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். கூடுதல் நீர்வரத்து இருந்தால் கூடுதலாக தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது. எனவே அமராவதி ஆற்றின் கரையோர பகுதிகளில் சிறுவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், உள்ளிட்ட எவரும் நீரில் இறங்கி குளிப்பதையோ, மீன்பிடிப்பதையோ, கால்நடைகளை குளிப்பாட்டுவதையோ, செல்ஃபி, புகைப்படங்கள் எடுப்பதை முற்றிலும் தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சியர் தங்கவேல் விடுத்துள்ள எச்சரிக்கை அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.