கானை அருகே ஏரிக்கரை பலப்படுத்தும் பணி ஆட்சியர் ஆய்வு
ஏரிக்கரை பலப்படுத்தும் பணி ஆட்சியர் ஆய்வு;
விழுப்புரம் மாவட்டம், காணை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆரியூர் ஊராட்சியில், கனமழை வெள்ளத்தினால், பம்பை ஆற்றுக்கு உபரிநீர் செல்லும் ஏரியின் கரைப்பகுதி சேதமடைந்துள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி,இ.ஆ.ப., இன்று (17.12.2024) நேரில் பார்வையிட்டு, கரைப்பகுதி பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு செய்தார். உடன் நீர்வளத்துறை செயற்பொறியாளர் ஷோபனா உட்பட பலர் உள்ளனர்.