திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா: வாகனங்கள் நுழைவு , பார்க்கிங் கட்டணம் ரத்து
கன்னியாகுமரி
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா கொண்டாட்டங்கள் இம்மாதம் 30 மற்றும் 31ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவை ஒட்டி கன்னியாகுமரி வருகின்ற வாகனங்களுக்கு நுழைவு வரி மற்றும் வாகன நிறுத்துமிட வரி ஆகியவற்றை தற்காலிகமாக ரத்து செய்வதாக மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் விவேகானந்தபுரம் நுழைவாயில், மற்றும் நாற்கர சாலையின் முடிவு பகுதி, கடற்கரை பஸ் பார்க்கிங் இடம், சூரிய அஸ்தமன பகுதிக்கு செல்லும் கோவளம் பகுதி, சுற்றுலா அலுவலகம் அருகே அமைந்துள்ள வாகன பார்க்கிங் பகுதி ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகளுக்கு உடைய வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. வருகிற டிசம்பர் 30 மற்றும் 31ஆம் தேதி கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு இந்த வாகன கட்டணங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மாவட்ட ஆட்சித் தலைவர் அழகு மீனா உத்தரவு பிறப்பித்து உள்ளார்.