சங்கரன்கோவில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளில் திமுக-வினர் மரியாதை
வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளில் திமுக-வினர் மரியாதை
ஆங்கிலேயருக்கு கப்பம் கட்ட மறுத்த இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் 265-வது பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் இரயில்வே பீடர் சாலையில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வைத்து மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் ராஜா தலைமையிலான திமுக-வினர் இணைந்து அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் தங்கவேலு, மாநில மருத்துவ அணி துணைச் செயலாளர் செண்பகவிநாயகம், திமுக மாவட்ட பொருளாளர் சரவணன், சங்கரன்கோவில் திமுக நகர துணைச் செயலாளர் சுப்புத்தாய் உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சியினர் கலந்து கொண்டனர்.