கோவை: மின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு பேரணி !
தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில், கோவை மாவட்டத்தில் மின் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில், கோவை மாவட்டத்தில் மின் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி இந்த பேரணியை நேற்று தொடங்கி வைத்தார்.அவினாசி சாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் தொடங்கிய இந்த பேரணி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சென்றடைந்தது.பேரணியில் பங்கேற்றவர்கள், மின் சிக்கனம் குறித்த பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தி சென்றனர். மேலும், பொதுமக்களுக்கு மின் சிக்கனம் தொடர்பான துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன.இந்த நிகழ்ச்சியில் கோவை மண்டல தலைமைப் பொறியாளர் குப்புராணி, கோவை மாநகர் வட்ட மேற்பார்வை பொறியாளர் சதீஷ்குமார் உள்ளிட்ட மின் வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் உரையாற்றினார். மின் சிக்கனம் என்பது ஒவ்வொருவரின் கடமை என்றும், இதன் மூலம் நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.