காரமடை: காட்டு யானை தாக்கி முதியவர் பலி !

காரமடை அருகே காட்டு யானை தாக்கி 50 வயதான விவசாயி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2025-01-03 07:36 GMT
காரமடை அருகே காட்டு யானை தாக்கி 50 வயதான விவசாயி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.நீலாம்பதி பகுதியைச் சேர்ந்த பொன்னுச்சாமி நேற்று காலை வழக்கம் போல் காலை கடனை கழிக்க சென்றபோது, புதர் மறைவில் இருந்து திடீரென தோன்றிய காட்டு யானை அவரை துரத்தி தாக்கியது. வயது முதிர்வின் காரணமாக தப்பிக்க முடியாமல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் காரமடை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.பொன்னுச்சாமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் காட்டு யானை நடமாட்டம் அதிகரித்துள்ளதால் மனித-விலங்கு மோதல்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News