திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியில் ஏராளமான பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று சீவலப்பேரில் உள்ள ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் காப்பு கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காப்பு கட்டி ஐயப்பன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்றனர்.