லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது

வேலூர் பெரியார் பூங்கா அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2025-01-06 05:39 GMT
வேலூர் பெரியார் பூங்கா அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக வேலூர் வடக்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது பெரியார் பூங்கா பகுதியில் உள்ள பெட்டிக்கடையின் அருகே நின்று கொண்டிருந்த நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அதில் அவர் வேலூர் தொரப்பாடியை சேர்ந்த சீனிவாசன் (வயது 47) என்பதும், லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர். சீனிவாசனிடம் இருந்து 50 கேரள லாட்டரி சீட்டுகள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன.

Similar News