பல்லடத்தில் பைக் மீது லாரி மோதி விபத்து தலை நசுங்கி பெண் பள்ளி

பல்லடம் அருகே இரு சக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் தலை நசுங்கி பெண் பலி;

Update: 2025-01-09 09:05 GMT
திருப்பூர் மாவட்டம் பல்லடம் கள்ளிமேடு பகுதியில் வசித்து வருபவர்கள் அந்தோணி ராஜ் நாகராணி தம்பதியினர். நாகராணி திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இன்று மதியம் உணவு இடைவேளை நேரத்தில் தன்னுடன் பணியாற்றி வரும் ராகவன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் கள்ளி மேட்டு பகுதியில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார்.கணபதிபாளையம் பகுதியை கடக்கும் போது இவர்கள் சென்ற இருசக்கர வாகனத்திற்கு பின்னே வந்த சரக்கு லாரி இவர்கள் மீது மோதியது. இதில் ராகவன் மற்றும் நாகராணி நிலை தடுமாறி கீழே விழுந்த போது லாரி நாகராணியின் தலையில் ஏறி இறங்கியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பலத்த காயங்களுடன் உயிருக்கு பேரடிய நிலையில் இருந்த ராகவனை மீட்ட அப்பகுதியினர் ஆம்புலன்ஸ் உதவியுடன் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பல்லடம் போலீசார் தலை நசுங்கிய உயிரிழந்த நிலையில் இருந்த நாகராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News