சட்ட விரோதமாக மணல் அள்ளிய லாரிகள் பறிமுதல்
சட்ட விரோதமாக மணல் அள்ளிய லாரிகள் பறிமுதல்;
விருதுநகர் அருகே உள்ள இ.குமார லிங்கபுரம் பெரிய கண்மாயில் இருந்து சட்டவிரோதமாக கிராவல் மணல் அள்ளப்படுவதாக சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் சிவகுமாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கோட்டாட்சியர் மற்றும் தாசில்தார் உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் இ.குமாரலிங்கபுரம் பெரியகண்மாயில் திடீர் சோதனை மேற்கொண்டனர். மேலும் இந்த சோதனையின் போது இ.குமாரலிங்கபுரம் பெரிய கண்மா யில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வேப்பிலைப் பட்டி கிராமத்தை சேர்ந்த சிவரஞ்சனி என்பவர் விவசாயத்திற்கு பயன்படும் வண்டல் அள்ளுவதற்கு அனுமதி பெற்று சட்டவிரோதமாக கிராவல் மணல் அள்ளியது தெரிய வந்தது. இந்த நிலையில் இ.குமாரலிங்கபுரம் பெரிய கண்மாயில் 10 டிப்பர் லாரி மற்றும் ஜேசிபி மற்றும் கிட்டாச்சி வாகனங்கள் சட்ட விரோதமாக கிராவல் மணல் அள்ளியதாக கூறப்படுகிறது. மேலும் சாத்தூர் கோட்டாட்சியர் சோதனையின் போது இ.குமார லிங்கபுரம் பெரிய கண்மாயில் சட்டவிரோதமாக கிராவல் மணல் அள்ளிக் கொண்டிருந்த நான்கு டிப்பர் லாரி உள்பட ஜேசிபி மற்றும் ஹிட்டாச்சி வாகனங்களை பறிமுதல் செய்து வச்சகாரப்பட்டி காவல் துறையிடம் ஒப்படைத்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இ குமாரலிங்கபுரம் கிராம நிர்வாக அலுவலர் அஜிதா கொடுத்த புகாரின் அடிப்படையில் வச்சகாரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து சட்டவிரோதமாக கிராவல் மணல் அள்ள பயன்படுத்திய 4 டிப்பர் லாரி உள்பட ஒரு ஜேசிபி மற்றும் ஹிட்டாச்சி வாகனங்களை பறிமுதல் செய்தனர் மேலும் சட்டவிரோதமாக இரவல் மணல் அள்ள பயன்படுத்திய மேலும் ஆறு டிப்பர் லாரிகளையும் வச்ச காரப்பட்டி போலீசா தேடி வருகின்றனர்.