விருதுநகர் மாவட்டம் ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம்-ஒரு வரலாற்றுப் பயணம்“ நூல் வெளியீட்டு விழாவில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு
வைகை,பொருநை நாகரிகத்திற்கு முன்பே வைப்பாற்று நாகரிகம் இருந்தது என்பதை வெம்பக்கோட்டை அகழாய்வு நிரூபிக்கிறது: அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்;
வைகை,பொருநை நாகரிகத்திற்கு முன்பே வைப்பாற்று நாகரிகம் இருந்தது என்பதை வெம்பக்கோட்டை அகழாய்வு நிரூபிக்கிறது: அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம் “விருதுநகர் மாவட்டம் ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம்-ஒரு வரலாற்றுப் பயணம்“ நூல் வெளியீட்டு விழாவில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு வைகை,பொருநை நாகரிகத்திற்கு முன்பே வைப்பாற்று நாகரிகம் இருந்தது என்பதை வெம்பக்கோட்டை அகழாய்வு நிரூபிக்கிறது என்றார். விருதுநகர் மாவட்டம் ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம்-ஒரு வரலாற்றுப் பயணும் எனும் நூலை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார். விருதுநகர் மாவட்டம் ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம், ஒரு வரலாற்றுப் பயணம் எனும் நூல் வெளியீட்டு விழா புதனன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. நிதி,சுற்றுச்சூழல் மற்றும் காலமாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நூலை வெளியிட, அதனை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பெற்றுக் கொண்டார். இந்நூல் 25 கல்லூரி வரலாற்றுத்துறை பேராசியர்களால் முதல் நிலைச் சான்றுகளைக் கொண்டு ஒரே ஆண்டில் எழுதப்பட்டுள்ளது. 540 பக்கங்களைக் கொண்ட இந்நூலில் 23 கட்டுரைகள் உள்ளன. இது, அரசு ஆவணக் குறிப்புகள், ஆய்வேடுகள், அரசு ஆவணக் காப்பகம் ஆகியவற்றின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது : விருதுநகர் மாவட்டத்தில் கரிசல் இலக்கிய திருவிழா நடைபெற்றது. அது முக்கிய நிகழ்வாகும். நாம் வரலாறை ஏன் அறிந்து கொள்ள வேண்டும் ? வரலாறு என்பது முடிந்து போன ஒரு காலம் முடிந்து போன ஒரு காலத்தை நாம் ஏன்? உணர்ந்து கொள்ள வேண்டும். நமக்கு எதிரே சவால்கள் மிகுந்த எதிர்காலம் இருக்கிறது. நாம் நீந்தி கடக்க வேண்டியது நிறைய இருக்கிறது. தன் கடந்த காலத்தை மறந்த ஒருவன் நினைவிழந்தவனாக தான் இருப்பான் என பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார். என்னுடைய மொழி, என்னுடைய நிலம் இது எத்தகைய தொன்மை வாய்ந்தது என்பதை நாம் அறியும் போது, நாம் பெறக்கூடிய இறுமாப்பு எதிர்காலத்தில் சாதிப்பதற்கு தூண்டுகிறது. நாம் ஒவ்வொருவரும் வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டும் என்கிற முனைப்போடு நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் தளபதி முக ஸ்டாலின் தலைமையில் இருக்கக்கூடிய இந்த திராவிட மாடல் அரசு என்பது ஆட்சி பொறுப்பை ஏற்று இருக்கக்கூடிய இந்த நான்கு வருடங்களிலே நாம் பண்பாட்டுத்தளத்தில் தொடர்ச்சியாக பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வந்திருக்கிறது . மொழியின் தொன்மையை குறித்து கீழடி ஆய்வு எடுத்துச் சொன்னது. குடியின் தொன்மை குறித்து அதிரம்பாக்கமும், பட்டறைபாக்கமும் நிறையச் சொன்னது. தமிழ் நாகரீகம் பெற்றிருந்த தொழில் அறிவு, தொழில் நுட்ப அறிவு என்பதற்கு மயிலாடும்பாறை கிடைத்திருக்கக்கூடிய சான்றுகள் உள்ளன. சிவகளையின் முடிவுகள் இந்திய துணைக்கண்டத்தில் இரும்பினுடைய பயன்பாட்டை, தொழில்நுட்பத்தை அறிந்து படைக்கலன்களையோ அல்லது உழவுத் தொழிலுக்கான கருவிகளை உருவாக்கிய ஒரு சமுதாயம் தமிழ் சமுதாயம் 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே இருந்துள்ளது. இரும்பின் பயன்பாடு வந்ததற்கு பிறகு தான் நம்முடைய நாகரீக காலத்தில் நாம் அடுத்த கட்டத்திற்கு நாம் போக முடிந்தது. நாம் இரும்பு காலத்தில் இருக்கக் கூடிய வேளையில் சிந்து சமவெளி நாகரீகத்தினர் செம்பு காலத்தில் இருந்துள்ளனர். ஆதிச்சநல்லூர் ஆய்வின் முலம் செம்பின் பயன்பாட்டை நாமும் அறிந்துள்ளோம் எனத் தெரிகிறது. இரும்பு செம்பை விட வலிவானது என்கின்ற காரணத்தால் நாம் இரும்பை கண்டுபிடிக்க வேண்டும் இந்த நாட்டை அடுத்த கட்ட தொழில்நுட்பத்திற்கு நாம் உயர்த்த வேண்டும் என்கின்ற அந்த முடிவில் நம்முடைய முன்னோர்கள் ஈடுபட்டு இன்றைக்கு இரும்பை நாம் நம்முடைய பகுதியிலே இவ்வாறாக இரும்பை நாம் உபயோகப்படுத்தலாம். விண்ணிலிருந்து வரக்கூடிய கற்களில் இருந்து இரும்பை எடுப்பதற்கு முன்பாகவே நமக்கென இரும்பை உருக்கக்கூடிய ஒரு தொழில்நுட்பத்தை அறிந்திருக்கக் கூடிய ஒருவராக நாம் நம்மை உருவாக்கியிருக்கிறோம் என்பது தான் முக்கியம். வைகை, பொருனை ஆற்று நாகரீகத்தை விட நமது வைப்பாற்று நாகரீகம் தொன்மை வாய்ந்ததாக இருந்துள்ளது என வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் அகழாய்வு நிரூபிக்கிறது. அன்றாட வாழ்வில் கூட அரசவையில் என்ன நடந்திருக்கிறது என்பதை மொகலாயர்கள் தெளிவாக எழுதி வைத்துள்ளனர். ஆனால், நம்முடைய மன்னர்களிடத்திலேயே அந்த பழக்கம் இல்லை. எனவே, அதை அறிய இலக்கியங்களும், செப்பேடுகளும், கல்வெட்டுகளும் துணை புரிகிறது. ஆங்கிலேயர் வருகைக்குப் பின்பு, மாவட்டங்களைப் பிரிக்கம் போது தான் மாவட்டத்தினுடைய மொத்த விவரங்களை அறிந்து கொள்ள முடிகிறது. விருதுநகர் மாவட்டத்தின் ஒரு பகுதி இராமநாதபுரத்தை பிரதிபலிப்பதாகவும், மற்றொரு பகுதி திருநெல்வேலி மாவட்டத்தை பிரதிபலிப்பதாகவும் உள்ளது. வடக்குப் பகுதி அப்படியே மதுரையை பிரதிபலிப்புதாக இருக்கும். ஒவ்வொரு இடத்திலிருந்து பூகோள ரீதியாக பகுதிகளை இணைத்து விருதுநகர் மாவட்டத்தை உருவாக்கியிருந்தாலும், அதற்கென்று தனித்த அடையாளங்கள் இருக்கிறது. அது தொழில் ரீதியாக, இலக்கிய ரீதியாக, தொல்லியல் ரீதியாக, வியாபார ரீதியாக இருக்கிறது. அந்த வகையிலே நம்முடைய வரலாற்று ஆவணமாக நம்முடைய மாவட்ட ஆட்சித் தலைவர் உருவாகும் எதிர்கால தலைமுறைகள் பார்க்கும் வகையில் விருதுநகர் மாவட்டத்தினுடைய வரலாற்றை எழுதி இருக்கிறார்கள். இந்த வரலாற்று உருவாக்குவதற்கு பேராசிரியர்கள் தங்களுடைய உழைப்பை இருக்கிறார்கள் ஒரு நாளிலே உருவாகவில்லை அந்த பணியை ஓராண்டு காலத்திற்குள்ளாக அருமையான முயற்சி, அனைவரும் பாராட்டக்கூடிய வகையிலே, நமக்கு பெருமை நாம் காலத்திற்கு விட்டுச் செல்லக்கூடிய ஒரு அறிவு சொத்தாக இந்த விவரச்சுவடி உள்ளது. நம் அனைவருக்கும் நமக்குப் பின்னாலே வரக்கூடியவர்களுக்கும் இது பயன்படும் என்கின்ற வகையில் இந்த நிகழ்ச்சியிலே தங்களுடைய அற்புதமாக அதை உருவாக்கிக் கொண்டிருக்கக்கூடிய நம்முடைய மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் இந்த பணியில் தங்களை ஒப்படைத்துக் கொண்டிருக்கக்கூடிய வரலாற்று கூடிய அரசு அலுவலர்கள் அத்தனை பேருக்கும் நான் என்னுடைய சார்பில் அரசனுடைய சார்பிலும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள் என்றார் அவர்.