தேசிய தொழுநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவிகள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் கலந்தது கொண்ட விழிப்புணர்வு பேரணியை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்

தேசிய தொழுநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவிகள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் கலந்தது கொண்ட விழிப்புணர்வு பேரணியை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்;

Update: 2025-01-30 09:44 GMT
விருதுநகரில் தேசிய தொழுநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவிகள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் கலந்தது கொண்ட விழிப்புணர்வு பேரணியை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கொடியசைத்து தொடங்கி வைத்தார் ... இந்தியா முழுவதும் ஜனவரி 30ஆம் தேதி தேசிய தொழுநோய் ஒழிப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அதனையொட்டி தமிழகத்திலும் தமிழக அரசால் பல்வேறு கலைநிகழ்ச்சியிலும் நடத்தப்பட்டு வருகின்றன. அதனை முன்னிட்டு இன்று விருதுநகர் தேசபந்து மைதானம் முன்பு தேசியத் தொழுநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணியில் கலந்து கொண்டு பள்ளி மாணவிகள் மற்றும் நகராட்சி ஊழியர்கள், ஆரம்பகால கூட்டு மருந்து சிகிச்சைதொழு நோயை முற்றிலும் குணப்படுத்தும், ஊனம் வராமல் தடுக்கும்,தொழு நோயற்ற இந்தியா அதுவே நமது குறிக்கோள்,தேமலா அலட்சியம் செய்யாதீர்கள்,தோலின் மினு அனுப்பு கை கால் மதமதப்பு மற்றும் நரம்பு தடித்து இருந்தால் தொழு நோயாக இருக்கலாம், என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோஷங்களை எழுப்பியவாறு இந்த பேரணியில் கலந்து கொண்டனர் இந்த பேரணி ஆனது விருதுநகர் தேசபந்து மைதானத்தில் தொடங்கி பழைய பேருந்து நிலையம் , கார்னேஷன் முக்கு, மாரியம்மன் கோவில், தெப்பம்,மெயின் பஜார் வழியாக வந்து நகராட்சி அலுவலகம் முன்பு முடிவடைந்தது பிறகு ஆரம்பிப்பதற்கு முன்பு தொழுநோய் சம்மந்தமான உறுதி மொழியை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனிடம் சேர்ந்து பள்ளி மாணவிகள் மற்றும் நகராட்சி ஊழியர்களும் சேர்ந்து உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர் மேலும் இந்த நிகழ்வில் மருத்துவபணிகள் துணை இயக்குனர் மணிகண்டன், இணை இயக்குனர் பாபுஜி , டீன் ஜெய்சிங், நகராட்சி ஆணையர் சுகந்தி, சுகாதார அலுவலர் இளங்கோ மற்றும் ஆய்வாளர் செந்தில் உட்பட நகராட்சி பணியாளர்கள், மருத்துவத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News