பள்ளி ஆய்வக கட்டிட அடிக்கல் நாட்டு நிகழ்ச்சிக்கு சென்ற தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் எங்கள் ஊருக்கு பஸ் விடுங்க சார் என்று சொல்லிய சிறுவன்
பள்ளி ஆய்வக கட்டிட அடிக்கல் நாட்டு நிகழ்ச்சிக்கு சென்ற தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் எங்கள் ஊருக்கு பஸ் விடுங்க சார் என்று சொல்லிய சிறுவனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.*;
காரியாபட்டி அருகே அரசு பள்ளி ஆய்வக கட்டிட அடிக்கல் நாட்டு நிகழ்ச்சிக்கு சென்ற தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் எங்கள் ஊருக்கு பஸ் விடுங்க சார் என்று சொல்லிய சிறுவனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே P.புதுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 35 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக ஆய்வக கட்டிடம் கட்டும் பணிக்களை தமிழ்நாடு நிதி சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு பள்ளி மாணவிகளை வைத்து அவர்கள் கையால் அடிக்கல் நாட்டி, பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். அப்போது மாணவர்களிடம் கலந்து உரையாடிய நிதியமைச்சர் தங்கம்தென்னரசு மாணவர்களின் பெயர், ஊர், என்ன படிக்கிறீங்க என்ற விவரங்களை கேட்டறிந்தார். அப்போது ஆத்திகுளத்தைச் சேர்ந்த சக்திகாளியம்மன் என்ற மாணவியிடம் பேசிய நிதிஅமைச்சர் ஆத்திகுளத்தில் இருந்து நடந்து பள்ளிக்கு வருகிறாயா, ரொம்ப சிரமமாக உள்ளதா என்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று நிதியமைச்சரை சந்தித்த சிறுவன் நானும் ஆத்திகுளத்தில் இருந்து நடந்து தான் சார் பள்ளிக்கு வரேன் பஸ் வரல என்று நிதியமைச்சரிடம் தெரிவித்தான். சற்றும் எதிர்பார்க்காத நிதியமைச்சர் அந்த சிறுவனின் பெயரை கேட்டார் அன்புக்கரசு என்று சொன்னவுடன் உன்னுடைய அன்புக்கு கட்டுப்பட்டு உங்க ஊருக்கு முதல் பஸ் விட்டு உன்னை தான் முதலில் ஏற்றி விடுவோம் என்று கலகலப்பாக பேசினார். பின்னர் நேரடியாக தைரியமாக வந்து பேசியதற்கு வாழ்த்து தெரிவித்து சிறுவனின் தோளில் கை போட்டவாறு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சிறிது தூரம் நடந்து வந்து நன்றாக படிக்க வேண்டும் என தெரிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.