மகாத்மா காந்தி நினைவு தினம் அனுசரிப்பு.
வேலூர் பேரூராட்சியில் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு திருவருட்சிலைக்கு மரியாதை.;
பரமத்தி வேலூர்,ஜன. 30: நாமக்கல் மாவட்டம் வேலூர் சிறப்பு நிலை பேரூராட்சி சார்பில் நடைபெற்ற மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் வாரிசு சங்கம் சார்பில் காந்தி நினைவு தின அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் வேலூர் பேரூராட்சி வளாகத்தில் அமைந்துள்ள காந்தி திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் வாரிசு சங்க மாவட்ட செயலாளர் அவினாசிலிங்கம், செயற்குழு உறுப்பினர் பழனிவேல், பேரூராட்சி செயல் அலுவலர் சோமசுந்தரம், பேரூராட்சி தலைவர் லட்சுமி முரளி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பொதுமக்கள் உட்பட பல கலந்து கொண்டனர்.