கோவை: மாணவியின் உயிரை காவு வாங்கிய தடுப்புச்சுவர் !

கோவையில் 19 வயது கல்லூரி மாணவி தடுப்புச் சுவரில் மோதி உயிரிழப்பு.;

Update: 2025-01-31 06:01 GMT
கோவை: மாணவியின் உயிரை காவு வாங்கிய தடுப்புச்சுவர் !
  • whatsapp icon
கோவை, சேர்ந்த 19 வயதான அக்க்ஷரா என்ற பெண் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்து இருக்கிறார். கடந்த 28ஆம் தேதி இவர் தன்னுடைய தம்பி அரவிந்தை பள்ளியில் விடுவதற்காக தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் சென்று விட்டு, அரவிந்தை பள்ளியில் இறக்கிவிட்டு, மீண்டும் அக்க்ஷரா கோழிக்கோடு கோயம்புத்தூர் பைபாஸ் சாலையில் சென்று கொண்டு இருந்தார். அப்பொழுது இவரின் இருசக்கர வாகனம் சாலையின் தடுப்புச் சுவரில் எதிர்பாராத விதமாக மோதி இருக்கிறது. அப்பொழுது பின்னால் கண்டைனர் லாரி வருவதை பார்த்து, சுதாரித்துக் கொண்டு கண்டைனர் லாரிக்கு வழி விடுவதற்காக முயற்சி செய்யும் பொழுது, டிவைடரில் மோதிய இவரின் இரு சக்கர வாகனம் விபத்துக்கு உள்ளானது. தற்போது மாணவி விபத்துக்கு உள்ளான சி.சி.டி.வி காட்சி இன்று வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கல்லூரி சென்று வருகிறேன் என கூறிவிட்டு சென்ற மாணவி பிணமாக வீடு திரும்பிய சம்பவம், கோவையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News